Monday, September 5, 2011

1.இயல்பான சேவை முன்னுரை




1.இயல்பான சேவை முன்னுரை

இயல்பான சேவையில் நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் போதுதான், இயற்கையுடன் சேர்ந்து இயங்கி ஆற்றல் பெறுகின்றோம். இயல்பான சேவையைப் பற்றி நிறைய அறியப்பட வேண்டும். இதனைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் உண்மைகளை உணர்ந்து செயல்படவும், இதனை எளிய முறையில் அனைவரும் அறியவும் வழிவகை செய்ய வேண்டும். இதனால் வாழ்க்கையின் சாரத்தை புரிந்துகொள்ள முடியும். இந்நூல் சமுதாய இயக்க உண்மைகளை அறிய செய்வதன் மூலம் எளிதில் தன்னை அறிய செய்து இயல்பான வாழ்க்கைக்கு வழிவகை செய்கிறது.

சேவையில் இயல்பை ஆராய்ந்து அறிய செய்கிறது. இயல்பான சேவையால் நம் இயல்பை எளிதில் விளங்கி அனுபவத்தில் உணரச் செய்கிறது. இதனால் தொடர்ந்து ஈடுபடும் போது நம் செயல்பாட்டின் வாயிலாக இயல்புணர்வுகள் தன்னைத் தானே நிலைக்கச் செய்கிறது. இதனால் பிறப்பொருளின் செயல்பாட்டின் வலிமை குறைந்து நமது இயல்பைப் பற்றி நமக்கு தெரியவரும். இதனால் உங்கள் வாழ்க்கை இயல்பாகும் போது, நம் அனைவராலும் உருவாக்கப்பட்ட சிக்கலான இந்த உலகில் வாழ்வது எளிதாகி விடுகிறது.

இயல்பான சேவையில் ஒவ்வொரு மனிதனுக்கும் சமமான செயல் முறை அறிவு பெறும் நாள் வந்தே தீரும். அப்போது இதன் இயல்பு அனைத்து இடத்திலும் பரவும். அப்போது அனைவருக்கும் இதைப் பற்றி தெளிவு ஏற்படுத்தி, நம்மைப் பற்றியஉண்மைகளை அறியச் செய்யும். இது தன்னை அறியும் வழிகளில் மிகச் சிறந்த வழியாகும்.

இந்த உலகை அருளிய அந்த மெய்ப்பொருளுடன் நாம் நிரந்தரமான நன்றியுணர்வு கொள்வோமாக தவறும் மனித இனம், தன் ஆதிமூல வீட்டிற்கே திரும்பிச் செல்ல இயல்பான சேவை வழிகாட்டும்.

அனுபவித்து விளக்கம் பெறுவீர்.

மனிதநேய இயல்பான சேவையை உணர்ந்து விளக்கம் பெறுவோம்.

கர்மயோக நிலையில் இயல்பானச் சேவையில் தெளிந்து விளக்கம் பெற்றுக்கொண்டே இருப்போம்.

இயல்பான சேவையில் நாம் முழுமையான பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் பொழுது, உண்மையை எளிதில் அறியச் செய்கிறது.

... குழுவினர்

No comments:

Post a Comment