Monday, September 5, 2011

3. மனிதநேய இயல்பான சேவை


3. மனிதநேய இயல்பான சேவை

``மனித நேயம் கொண்ட இயல்பான சேவையில் எண்ணமும் வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று கலக்கும். இதனால் உன்னை சுற்றியுள்ள உலகை தெளிவாக பார்க்க முடிகிறது’’.

நாம் இயல்பான சேவை செய்வதால் சமுதாயத்திற்கு நன்மை செய்கிறோம். அதன்மூலம் உண்மையில் நமக்கு நாமேதான் உதவி செய்கிறோம். இதனால் நாம் அனைவரையும் மனிதநேய மிக்கவர்களாக மாற்றுகின்ற அரிய சக்தி உள்ளது. மனிதநேயம் என்பது இரக்கம், கருணை, அன்பு, பரிவு, பாசம் ஆகியவை அனைத்தும் இணைந்துள்ள மறு உருவமாகும். எனவே மனிதநேய இயல்பான சேவை என்பது மிகச் சிறப்பு வாய்ந்தது. இது சேவையைக் காட்டிலும் பல மடங்கு பலன் உள்ளது. இதன் உண்மை நிலையை எளிதில் அறிய முடியும். மனிதநேய சேவை மூலம் நாம் நமது இயல்பை அடைவதற்கான ஆற்றல் விரைந்து கிடைக்கச் செய்கிறது.

இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் சேவை செய்யலாம். ஆனால் மனிதப் பிறப்பில் மட்டுமே அன்பும், கருணையும் கொண்ட சேவையைச் செய்திட முடியும். இந்த அரிய சேவையே சிறந்த இயல்பான சேவை. இது அன்பும் கருணையும் கொண்ட இயல்பான சேவையில்தான் நமது இயல்பை எளிதில் உணர முடியும். அப்போது மனிதநேயம் மலர்கின்றது. மனித நேயத்தால் மனிதன் முழுமையடைகின்றான். எனவே மனிதநேயம் கொண்ட சேவையே சிறந்த இயல்பான சேவையாகத் திகழ்கின்றது.

புலன் இன்பங்கள் பலருக்கு மகிழ்ச்சியைத் தருவதால் அவர்கள் அவற்றை நாடிப் போகிறார்கள். ஆனால் புலன் இன்பங்களைவிட உயர்ந்த இன்பம் மனித நேயத்துடன் செய்யும் இயல்பான சேவையில் அனுபவம் மூலம் பெற முடியும்.

மனிதநேய இயல்பான சேவையில் மனம் பண்பட ஆரம்பிக்கும்; பின் அதில் லயிக்கும். எந்த விஷயத்தில் நீங்கள் மனத்தை ஈடுபடுத்தினாலும் மனம் உடனே அந்த ரூபமாக மாறிவிடும். நீங்கள் சிறிது நேரம் பாட்டு கேளுங்கள்; உடனே பெரிய பாடகனாக ஆக வேண்டும் என நாட்டம் ஏற்படும். இது மாதிரி ஒவ்வொரு விஷயத்திலும் மனம் மாறிவிடுகிறது. இதை அறியாமல் எல்லோரும் இப்படித்தான் சிக்கிக் கொள்கிறோம். திருமணம் செய்வது, திருமணம் செய்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்வது, பிறகு படிக்க வைப்பது, சொத்து சேர்ப்பது என இப்படி ஒரு சூழலில் சிக்கிக் கொள்கின்றோம். இயல்பான சேவையில் மனம் பண்படச் செய்து மனித நேயத்தை வளர்த்து உள்முகமாக சிந்திக்க வேண்டும். அப்போது உங்களுடைய வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தம் கிடைக்கும்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்என்ற உயரிய பழமொழி ஒன்று பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இன்றுவரை சொல்லப்பட்டு வருகின்றது. இப்பழமொழி வெறும் வாக்கிய அமைப்பு அல்ல. இப்பழமொழி வெறும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட சொற்றொடரல்ல; இந்தப் பழமொழியை ஒருவர், மற்றொருவரிடம் சொல்லும்போது மனிதநேயம் கொண்டதாக அமையும் உயரிய பழமொழியாக மாறுகின்றது.

மனிதநேயம் மிக்க இயல்பான சேவை உயர்ந்தது. இது உங்களுடைய ஆழ்மனத்தில் தேங்கியுள்ள எல்லாக் கசடுகளையும் களைந்து வெளியே கொண்டு வந்துவிடும். நீர்த்தொட்டியில் பாசி பிடித்திருந்தால் தேய்த்து பிறகு தண்ணீர்விட்டு எல்லாவற்றையும் வெளியில் எடுத்து எறிவதுபோல மனிதநேயம் மிக்க இயல்பான சேவையால் மனத்தைச் சுத்தம் செய்கிறோம்.

மனிதநேயத்துடன் செய்யும் இயல்பான சேவையானது தெய்வாம்சம் உள்ளதாக மாறிவிடும். நம் சேவையின் பணிகளில் நமக்குத் தெய்வாம்சம் உரியதாக மாற்றும் ஆற்றல் இருக்கும். நாம் இறந்த பின்னும் நரகத்திற்குச் சென்று மனிதநேய சேவை செய்ய முடியும் எனில், நமக்குச் சொர்க்கத்தைவிட நரகமே போதும்.

மனிதநேயம் கொண்ட இயல்பான சேவையால் மனோபாவம் விரிவடைகிறது. மகிழ்ச்சி பெருகுகிறது. இயல்புணர்வு விரைவாக விடைபெற்றுக் கொண்டு வெளியேறுகிறது. இதன் நிறைவால்  நம்முள்ளே சாந்தம், பணிவு, இரக்கம் போன்ற நற்குணங்கள் வளர்ந்த வண்ணமாகவே இருக்கும். நாம் சாந்த மயமான மனத்தைப் பெற்றிருத்தல் வேண்டும். இதுவே சுயக்கட்டுப்பாட்டினை ஏற்படுத்தும். எல்லோருக்கும் மனிதநேய சேவை அன்பின் வெளிப்பாடுதான். உள்மன அன்பின் புறவெளிப்பாடே மனிதநேய சேவையாகும். மனிதநேயம் கொண்ட இயல்பான சேவையைப் பேணிக் காப்பவரின் உள்ளமே இறைவனின் உறைவிடம்.

``இந்த உலகில் மட்டும் தான் மனிதநேயம் கொண்ட இயல்பான சேவை செய்திட முடியும். இதனால் சுயமாக இயல்புணர்வை அரிய முடிகிறது.’’

No comments:

Post a Comment