Monday, September 5, 2011

10. இயல்பு வாழ்க்கை


10. இயல்பு வாழ்க்கை

``இயல்பான சேவை செய்வதன் மூலமாக தன்னையே அறிந்து இயல்பு வாழ்க்கை வாழ்வதற்கு தகுதி ஆக்கிக் கொள்ளலாம்’’.

``இயல்பான சேவையில் உட்பொருளை உணர்வதால் மனம், உடல், உயிர் ஆகியவை சமநிலை அடைந்து இயல்பு வாழ்க்கையை அறியச் செய்கிறது’’.

நாம் அனைவரும் வாழ்க்கை வாழ்வதற்கான சக்தி இருக்கிறது. நாம் அனைவரும் பெரும் சாதனைகள் புரிய; மகிழ்ச்சி பொங்கும். வாழ்க்கை வாழ ஆழ்மனத்தில் மறைந்து கிடைக்கும் உயர்ந்த சக்தியை இயல்பான சேவையினால் இன்னும் ஆழமாக சென்று உங்களைக் கண்டுபிடிப்பதற்கு உதவும் வகையில் உள்ளது. உங்கள் வாழ்க்கைக் கட்டத்தினை கடந்து செல்வதற்கான ஒரு தூண்டுகோலாக அமையும். மேலும் `புரிதலுக்கான உருமாற்றம்என்று நாம் அமைக்கின்ற இயல்பு வாழ்க்கை அனுபவத்தைப் பெற உதவியாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் முழுமை காண விரும்பும் உங்களைப் பற்றிய உண்மையை அறிய முடியும்.

இயல்பான வாழ்க்கையில் இயல்பான சேவை வழியாக தனக்கே இயல்பாக உள்ள ஆற்றலை கண்டறிய முடிகிறது. அதற்கே உரிய இயல்பான சிந்தனைத் திறனால் சிந்திக்கக் கூடிய திறனைச் சுதந்திரமாக வளர்க்கத் தொடங்கி விடுகிறது. ஒருவர் தன்னுடைய இயல்பான தனித்தன்மையை உணர வேண்டுமானால் இயல்பான சேவை தவிர வேறு எளிய வழி எதுவும் இல்லை. தன்னியல்புத் தன்மையை வழிநடத்திச் செல்ல வேறு வழியும் இல்லை. இயல்புடன் வாழ்வதற்குப் பொருத்தமான வேறு எளிய வழி எதுவும் இல்லை.

இந்த நடைமுறை நாம் எல்லோருமே எதிர்கொள்ள வேண்டிட மிகப்பெரிய சவாலைப் பற்றிய ஒரு கருத்தை நமக்குத் தருகிறது. படிப்படியாக நம்மை வடிவமைக்கும் வருடங்களால், கலவாங்களும், குழப்பங்களும் நிறைந்த இந்த உலகத்தின் நியாயங்களை நாம் ஏற்றுக் கொண்டு, நம்முடைய உண்மையான தனித்தன்மையிலிருந்து விலக்கப்பட்டு விடுகிறோம். வறுமை, வன்முறை, தோல்வி போன்றவற்றிற்க்கு இரையாகி விடுகிறோம். வாழ்க்கையின் தன்மைகள் நம்மைத் தாக்குதலுக்கு உள்ளாக்கி விடுகின்றன. அவற்றின் தாக்குதல்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடிவதில்லை. நம்முடைய பிற்கால வாழ்க்கையில் மீண்டும் மறைவிடத்திலிருந்து வெளிப்படுகின்றன. நாம் வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது, நம்மில் பெரும்பாலானவர்கள் நம்மைச் சுற்றிலும் உள்ள பலவற்றினாலும் பாதிக்கப்படுகிறோம் என்கின்ற உணர்வே இல்லாமல் இருக்கிறோம். அப்படிப்பட்ட நிகழ்வு ஒன்று நடந்தது என்ற சந்தேகமே இல்லாமல் இருந்து விடுவோம். நம்மில் பெரும்பாலானவர்கள் அந்தச் சீரழிவைச் சரிப்படுத்திக் கொள்ளாமலேயே மீதியுள்ள வாழ்க்கையை வாழ்கிறோம்.

பெருமளவுக்கு நாம் நம்முடைய அறிவுத்திறனை நம்முடைய உணர்வு நிலை மட்டத்திற்குக் கீழேயே இயங்கும்படி செய்கிறோம். இந்த இயல்பான சேவையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திட்டம், உங்களுக்குள் மறைந்து கிடக்கும் ஒப்பற்ற ஆற்றலை, நீங்கள் இன்னும் ஆழமாகச் சென்று உங்களைக் கண்டு பிடிப்பதற்கு உதவும் வகையில் உள்ளது. உங்களுக்குள் உறைந்து கிடக்கும் அந்த உன்னதமான ஆற்றலை நீங்கள் சேவையில் கண்டுகொண்டு உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டீர்களானால் உங்களுடைய உன்னதமான வாழ்க்கையை எளிதில் அறிய முடியும்.

இயல்பான சேவையின் நோக்கங்களை நீங்கள் உங்களுடைய இயல்பில் உங்களுடைய வாழ்க்கைக்கு உள்ளிருந்தே நிறைவேற்றிக் கொள்வதற்கு இது உதவியாக இருக்கும். இதில் நீங்களே உங்களை ஆற்றல் உள்ளவர்களாக மாற்றிக் கொள்கிறார்கள். இதனால் உங்கள் மனக்குழப்பங்களிலிருந்தும், சுய சந்தேகங்களிலிருந்தும், தொடர்ச்சியான தோல்விகளிலிருந்தும் காப்பாற்றி, நீங்களே உங்களுடைய இலக்குகளை அடைவதற்குத் தேவையான ஆற்றலை உங்களுக்குள்ளிருந்தே வெளிப்படச் செய்வதுதான் அந்த நம்பிக்கை.

சிந்திப்பதற்கு இந்த மண்ணில் வாழும் எல்லா உயிரினங்களிலிருந்தும் நம்மைப் பார்க்கக் கூடிய திறமை நமக்குச் சிந்தனை தருகிறது. இயல்பான உணர்வுகளின் அடிப்படையில் வாழ்வதைக் காட்டிலும் சிந்தனைகளின் அடிப்படையிலேயே நாம் வாழ்கிறோம். இயல்பான சேவையின் வாயிலாக சுதந்திரமாக கற்றுக் கொள்ளவும், வளரவும், சோதிக்கவும் நம்மால் முடிகிறது. இதனால் தேவையுள்ளவைக்காகச் சிந்திக்கக் கூடிய வகையில் நம்முடைய சிந்தனை போக்கு அமையும். அதற்கே உரிய இயல்பான சிந்தனைத் திறனால் சிந்திக்கக் கூடிய திறனைச் சுதந்திரமாக வளரத் தொடங்கி விடுகிறது.

யாரெல்லாம் இயல்பான சேவை செய்கிறார்களோ அவர்களெல்லாம் நம்மைப் படைத்தவருக்குச் சேவை செய்கிறார்கள்-தங்களுடைய முயற்சிகளினால், நிறைவுறும் செயல்களினால், பூமியில் கடவுளின் பணி நிறைவு பெறுகிறது. அதற்கான பரிசுகள் ஏராளமானவை சிலர் அதைச் தேவையானதென்றும் வேறுபாட்டை உண்டாக்குகிறதென்றும் உணர்வு ரீதியான அந்த பங்களிப்புக்கு கிடைக்கும் நிறைவை தெரிந்திருக்கிறார்கள். இந்த நிறைவுகளெல்லாம் வலிமையில்லாத வையாக இருந்த போதும், மிகப்பெரிய அளவில் அர்த்தமுள்ள தாகவும், வாழக்கூடியதாகவும் இருக்கிறது. மனநிறைவு, மன மகிழ்ச்சி, பெருமிதம் போன்ற அந்த உணர்ச்சிகளுக்கு என்ன விலை கொடுக்க முடியும்-நேசித்தோம், இயல்பான சேவை செய்தோம்.

உண்மையில் நாம் யாராக இருக்கிறோம் என்பதைப் பற்றிய நம்முடைய உண்மையான தன்னியல்வு நிலைமையை நம்முடைய பங்களிப்பின் வாயிலாக அறிவோம். இதுதான் இயல்பான சேவை குறித்து உள்ள கோட்பாடு. இயல்பான சேவை எளிமையான தாகவும், ஆழமானதாகவும் உள்ள ஒரு கருத்தாக்கம் கனவு மனம் எப்போதும் தன்னையே வெளிக்காட்டிக் கொண்டிருக்கக் கூடியது முழுமையான உண்மையை அது உள்வாங்கிக் கொண்டு செயல்படுவது இயல்புணர்வு மனத்தினால் இயல்பான சேவை அளிக்கப்படுகிறது. அவை பௌதிகத் தன்மையுள்ள வடிவங்களாக உருமாறுகின்றன. பிறருக்கு வழங்குவதன் மூலமாகவும், அர்ப்பணிப்பதன் மூலமாகவும் பங்களிப்புக்கள் நிகழ்கின்றன. இந்த இயல்பான சேவைகளெல்லாம் இயல்பான வாழ்க்கைக்கு வழிக் காட்டுகின்றன.

இயல்பான சேவையின் உண்மை எவ்வளவு உயர்ந்தது என்று சிந்தித்துப் பாருங்கள்! கடைசியாக நீங்கள் ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும். பெருந்தன்மையும், தன்மதிப்பும் நிறைந்த உங்கள் இயல்பு வாழ்க்கையை மகுடமாக அணிந்து கொள்ளக்கூடிய திறனைப் பெறுங்கள் இயல்பான சேவையில் நிறைவோடு இருங்கள்! அதை நீங்கள் உங்களுக்குக் கொடுங்கள், எனக்கு கொடுங்கள் உங்களுடைய உன்னதமான தன்மையை விரிவான இந்த உலகம் பங்கீட்டுக் கொள்ளட்டும். இது எப்படிப்பட்ட ஒரு சவாலாக, எப்படிப்பட்ட ஓர் உன்னதமான சந்தர்ப்பமாக இருக்கிறது என்று உங்களால் பார்க்க முடியுமானால் இயல்பான சேவையால் உங்களுடைய வாழ்க்கையைப் பற்றி எப்பொழுதுமே பாவப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த முறையில் தான் இயல்பு வாழ்க்கை அமையும்.

``இயல்பான சேவையை இன்றியமையாத அங்கமாக்குங்கள். இதைத் தொடர்ந்து இயல்பு வாழ்வு உங்களுக்கு வாழ்க்கை முறையாகும்’’.

No comments:

Post a Comment