Monday, September 5, 2011

2. இயல்பான சேவை


2. இயல்பான சேவை

``நம்மைப் பற்றி ஆராய்ந்து அறிந்து கொண்டதை, இயல்பான சேவையில் நம்மைப் பற்றி எளிதில் புரிந்து உணரச் செய்கிறது’’.

இயல்பான சேவையில் ஈடுபட்டு வாழும் வாழ்க்கையே சிறந்த நெறியான வாழ்க்கையாக அமையும். ஒவ்வொருவரும் முடிந்த அளவு சேவை செய்வதால் இந்தச் சமுதாயம் பெருமளவு முன்னேற்றம் அடைகிறது.
வளர்ந்த இன்றைய சமுதாயத்தில் ஏதேனும் ஒரு விதத்தில் துன்பத்தை நினைந்து கஷ்டப்பட்டுக் காலத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கின்றோம். இந்தச் சூழ்நிலையில் சேவையில் செயல்களை அறியச் செய்து, நிறைவான வாழ்க்கை வாழ வழிவகை செய்கின்றது. நம்முடைய உடல் செயல் புரிவதற்கான கருவியாகும். தனக்காகச் செய்யும் செயல்களுடன் பிறருக்காகவும் நாம் செய்யும் செயல்தான் இயல்பான சேவையாகும்.

இயல்பான சேவையைச் செய்து கொண்டு வாழ்க்கையை ஆராய்வோமானால் மனதைப் பற்றிய உண்மை நிலையை அறிய முடியும். இவ்வளவு உயர்ந்த இதனை அனுபவித்து அறிய வேண்டிய உண்மையே தவிர வெறும் வார்த்தை ஜாலமல்ல. எவ்வளவுதான் பேசினாலும், அல்லது அறிந்து வைத்துக் கொண்டாலும் அது சேவையாகாது. ஆகவே வாழ்க்கையைப் பொறுத்தவரை எல்லா விஷயங்களிலும் உண்மையைப் பார்க்கவே நாம் முயல வேண்டும். விஞ்ஞானத்தில் உள்ளது போல இதில் உள்ள உண்மைகளை நாம் கண்டு அறிந்து உணர முயல வேண்டும். இதைச் செய்து கொண்டு ஆராய்ச்சி செய்தால் அந்த உண்மையை அறியலாம். எப்போதும் புரிந்து கொண்டு மனத்திலும் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இதனால் மனிதர்களிடையே நிலவுகின்ற கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு சண்டை மற்றும் பூசல்களும் மறையும். வாழ்க்கையில் ஒரு உன்னத அனுபவம் ஏற்படும்.

இவ்வுலகில்தான் நம்மால் இயல்பான சேவை செய்திட முடியும். மற்ற உலகில் இல்லை. இந்த மனிதப் பிறப்பில்தான் நாம் இயல்பான சேவை செய்திட முடியும். இது நமக்கு கிடைத்திருக்கின்ற அரிய வாய்ப்பாகும். இதனால் தான் நாம் எங்கிருந்து வந்தோமோ, அந்த இடத்திற்குச் செல்லும் சரியான பாதையை அறிய முடியும். அதற்கு வழிகாட்டுவதுதான் இயல்பான சேவை. மற்ற எல்லா வழிகளும் சுற்றுப் பாதையாகும். அவ்வளவு சிறப்புமிக்க இதை உணர்ந்துச் செயல்படும்போது விரைந்து இலக்கை நோக்கிச் செல்லலாம்.

புத்தகங்களும், கொள்கைகளும் போதும், இயல்பான சேவைதான் அனைத்திலும் சிறந்தது. ஆரம்ப நிலையில் கவர்ச்சியில் மயங்கி அவர்களிடம் உள்ள குறுகிய நோக்கம், பரந்த மனப்பான்மைக்குத் தடையாக நின்று அதற்கு அப்பாலும் உள்ளவை எல்லாம் அவர்களுடைய பார்வையிலிருந்து மறைந்து விடுகின்றன. ஆனால் இயல்பான சேவையால் தேவையற்ற உலகப்பற்றுதலில் இருந்து விடுபடுகிறோம்.

நாம், இயல்பான சேவை என்னும் மார்க்கத்தில் நடக்க வேண்டும். அதுவே நல்லது. அப்போதுதான் மகான்கள் எய்திய நற்பேறு நிலைகளை நாமும் அடைய முடியும்.

ஆற்றுகின்ற சேவையின் அளவு முக்கியமல்ல; அதனுடைய தரம் மட்டுமே முக்கியம். சேவை என்பது பலனை எதிர்பார்க்காமல் ஆற்றுகின்ற செயலேயாகும். எந்தச் செயல் பண்பட்ட செயலாக அனைவரின் முன்னேற்றத்தைத் தூண்டிவிடுகின்றதோ அதுவே உண்மையான இயல்பான சேவையாகின்றது. இயற்கை சக்திகள் அனைத்தும், தமக்காக என்று எந்தச் செயலும் செய்யாமல், பிறருக்காகவே செயல்களைச் செய்கின்றன. ஐந்தறிவுள்ளவை தமக்காக மட்டுமே செய்லகளைச் செய்கின்றன. ஆனால் ஆறு அறிவுள்ள மனிதர்கள் தமக்கும் பிறருக்குமாகச் செய்லகளைச் செய்கின்றனர். அதனைச் சீர்மைப்படுத்தி பிறருக்காகவும் முடிந்தவரை செய்கின்ற செயலே சிறந்த இயல்பான சேவையாகக் கருதப்படுகிறது.

இயல்பான சேவையில்தான் மனிதன் மனம் நிறை நிலையை அடைவதற்கு சிறந்த அனுபவம் கிடைக்கிறது. இந்த அனுபவம் தன்னை அறியச் செய்கிறது.”.


No comments:

Post a Comment