Monday, September 5, 2011

8. இயல்பான சேவையில் தெளிவு


8. இயல்பான சேவையில் தெளிவு

``இயல்பான சேவையால் வெளிப் பொருட்களுடன் உள் இயல்பை அறிய செய்து தெளிவை ஏற்படுத்துகிறது.’’

நம்மால் முடிந்த அளவு சேவை செய்வது ஒன்றே வாழ்க்கையை வளமாக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மற்ற எல்லா சிறப்புகளும் ஒரு நாள் தேய்ந்து மறைந்து போகும். (இயல்பான சேவையின் பலன் ஈறெழு ஜென்மமும் வரும்) இது வளமான சமுதாயத்திற்கும், முழுமையான வாழ்விற்கும் ஒரு திறவுகோலாக அமையும்.

இயல்பான சேவையில் அன்புதான் அடிப்படையான ஆதாரம். தன்னலம் கருதாது செய்யும் இது மிகச் சிறந்தது. சுய நல நோக்கமில்லாமல் செய்கிற இயல்பான சேவையே இறைவனுக்குச் செய்யும் சேவையாகும். எங்கும் நிறைந்துள்ள இறைவனின் படைப்புகள் என நினைந்து இயல்பான சேவை செய்கின்றோம். அப்போது வழக்கமான - அன்றாட - தினசரி வேலையைச் செய்வதில் வெளிப்படையாக ஈடுபட்டிருந்தாலும், உண்மையில் நாம் இயல்பான சேவை என்னும் மார்க்க்ததையே பின்பற்றுபவர்களாக இருப்போம். பொது வாழ்க்கையில் நாம் இருக்கும் இடத்தை இறைவன் குடியிருக்கும் இடமாகக் கருதி நாம் இதை செய்வதால் நாம் பார்ப்பதெல்லாம் இறைவன் படைப்பாகத் தெரிகின்றது. நமது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டவர்கள் என்றும் நாம் கடமையுணர்ச்சியுடன் அவர்களைப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும் என்றும் கருதி நடப்போமென்றால் நாம் கடவுளின் குழந்தைகளுக்கே சேவை செய்கிறோம். அதன்மூலம் நாம் கடவுளுக்கே சேவை செய்கிறோம். இதனால் நமக்கு அவர்கள்மேல் உள்ள அளவுக்கு மீறிய பற்றை (பாசத்தை) நீக்கிவிட்டு அதன்மூலம் நம் பாதையில் இருந்து மிகப்பெரிய தடைகளையும் விலக்கி விடுகிறோம். இது நாம் சுயநலம் இல்லாமலும் சொந்தப் பற்றுதல் இல்லாமலும் தெய்வீகக் கட்டளையாகச் செய்வதாகவே தோன்றும். இதனால் அகிலம் முழுவதும் அளாவிய அன்பு ஓங்கி வளர்கிறது. நாம் கடவுளின் ஒவ்வொரு படைப்பையும் அவற்றின் மேல் பாசமும் பற்றுமில்லாமல் நேசிக்கத் தொடங்குகிறோம்.
நீ ஒருவருக்கு இயல்பான சேவை செய்வதால் உனக்கு நீயே சேவை செய்ய முடிந்ததை நினைத்து அவனிடம் நீ நன்றியுள்ளவனாக இரு. சேவை செய்பவன்தான் பாக்கியசாலியே தவிர, பெறுபவன் அல்ல.

உலகில் வாழும் மனிதன் பற்றுதல்களாலும் பொறுப்புகளாலும் ஏற்பட்ட அனேகக் கவலைகளாலும், விகாரங்களாலும் சூழப்பட்டிருக்கும்போது சேவை செய்வது முடியாத காரியம் என்று சிலர் நினைக்கிறார்கள். கடவுளுக்கு நாம் செய்யும் இயல்பான சேவை என உண்மையான முறையில் திருப்பினால் அது மிகவும் எளிதான செயல் என்று அவர்களுடைய சொந்த அனுபவமே அவர்களுக்கு நிரூபித்துவிடும். எல்லாத் தொந்தரவுகளும், வேலைகளும் இருந்தபோதிலும் எல்லோராலும் இவ் வழிமுறையைப் பின்பற்றி நடக்க முடியுமென்றும் அவர்களுக்கு விளங்கும்.

நம்மிடமுள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான வழி, இயல்பான சேவை செய்து மற்றவர்கள் தங்கள் தெய்வீக இயல்பை எல்லா இதயங்களிலும் வெளிப்படுத்தும்படிச் செய்ய வேண்டும். இயல்பான சேவை செய்வதன் மூலமாகத்தான் எல்லா நன்மைகளையும் பெற்றுச் சேவையில் தெளிவு பெறமுடியும். பரிபூரணமான தியாக உள்ளத்துடன் இயல்பான சேவையில் ஈடுபடு, சேவையில் வெற்றி பெறுவதற்காகவே பிறந்துள்ள மனம், உறுதியுடன் தானாகவே இணைந்து விடாமுயற்சி செய்து இயல்பான சேவையின் தெளிவை உணர்ந்து கொள்ளும். இதனால் எதை செய்தாலும் நிறையுணர்வோடு செய்வது இயல்பாகி விடுகிறது. இதனால் நாம் ஏதாவது ஒரு வகையில் மக்களுக்குச் சேவை செய்து நிறைவு காண்போம். இதனால் பூமியின் மாறுதல்கள் மேலும் பாதிக்கப்படுவதில்லை. அவன் கருணையையும், அன்பையும் அறிகிறான். இதனால் அமைதி நிலவுகின்றது. அவன் மேலும் உயரிய இயல்பான சேவையால் உயர்கின்றான். மிக உயர்ந்த இயல்பான சேவையில் வாழ்க்கையைப் புனிதமாக்குகின்றான். இது எரிச்சலை நீக்கி, நிம்மதியைக் கொடுக்கின்றது. சாந்தப்படுத்தி, புதுப்பித்துப் பழைய நிலைக்குக் கொண்டுவரும் உள்ளானந்தத்தில் பிரவேசிக்கும். அகங்காரம், காமம்,  போராசை போன்ற இகப்புத்திகள சிறிது சிறிதாக நீங்கித் துக்கங்கள், மனக்குழப்பங்கள் குறைந்து பண்பு நிறைந்தவனாக, அன்பு நிறைந்தவனாக, விழிப்புணர்வு மிக்கவனாக, உள்ளானந்தம் உடையவனாக மாறிப் பரிபூரணமானவனாகத் திகழ்கிறான்.

இயல்பான சேவையை நேசியுங்கள்; இதுவே நிரந்தரமான சத்தியம். இங்குதான் எல்லா முரண்பாடுகளுக்கும் தீர்வு காணப்படுகின்றது. இங்கு எவனொருவன் சென்று செயலாற்றுகின்றானோ அதுவே சிறந்தது. இதனால் அவன் குடும்பத்திற்கும் தனக்கும் செய்ய வேண்டிய கடமையை நிறைவு செய்கின்றான். அவன் செய்யும் தொழிலில் சிறந்து, கிடைக்கும் நேரத்தில் இயல்பான சேவை செய்து பரம்பொருளுக்குச் செய்யும் சேவையாக நினைத்துத் திருப்தியடைகின்றான்.

இயல்பான சேவையில் தெளிவு என்பது உன்னதமான இலக்கு. இதை வார்த்தையில் விவரிக்க இயலாது. இது ஒவ்வொருவரும் அனுபவித்து உணர வேண்டிய உண்மையாகும்.

இயல்பான சேவையில் வெளிப்படுத்தும் இயல்புணர்வு களால் அவனது சிந்தனையும் செயலும் அகதூய்மையடைந்து நம் இலக்கை விளக்குகின்றது.







No comments:

Post a Comment